தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரில் போடிநாயக்கனூர் நகர்நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் TBSSCS வடமலை ராஜைய பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரில் போடிநாயக்கனூர் நகர்நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் TBSSCS வடமலை ராஜைய பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் செயலாளர் பாண்டியன் முக்கிய ஆலோசகர்கள் சுந்தர்ராஜன், ரவிசந்திரன் ,ஓய்வு பெற்ற சார்புஆய்வாளர் ராமகிருஷ்ணன்.மற்றும் போடி நகர் பகுதியை சேர்ந்த சமுதாய முக்கிய தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்த செயற்குழு கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த செயற்குழு கூட்டத்தில் சாலை காளியம்மன் கோவில் அருகே சன்னாசிபுரம் செட் பகுதி மக்களுக்காக பேருந்து நிறுத்தம் ஏற்படுத்துவது, போடி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத குளிர்சாதனபெட்டி வழங்குவது, போடி நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

