தேனி மாவட்டம் போடி சேனைத்தலைவர் சுதந்திர மஹாலில் இன்று நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நகராட்சி சேர்மன் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி சேனைத்தலைவர் சுதந்திர மஹாலில் இன்று நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நகராட்சி சேர்மன் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் வருவாய்த்துறையினர் , மருத்துவத்துறையினர், மின்வாரியத் துறையினர் நகரமைப்பு பிரிவினர் , பொது சுகாதார பிரிவினர், மற்றும் பல்வேறு அரசு துறையினர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொது மக்களால் அளிக்கப்பட்ட பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.மேலும் வருவாய்த் துறையினரால் இரண்டு நபர்களுக்கு உடனடி பட்டா சான்று வழங்கப்பட்டது.இந்த முகவில் போடி நகர் திமுக நகர செயலாளர் புருசோத்தமன் ,நகராட்சி ஆணையாளர் பார்கவி திமுக தேனி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆசிப் கான் ,வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் திமுக நகர துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் குமார், அலமேலுமங்கை,தேனி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன்மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


