கமுதி அருகில் ரோட்டில் தவறவிட்ட 2 பவுன் தங்க சங்கிலி உரிய நபரிடம் ஒப்படைப்பு

கமுதி அருகில் ரோட்டில் தவறவிட்ட 2 பவுன் தங்க சங்கிலி உரிய நபரிடம் ஒப்படைப்பு
ராமநாதபுரம் மாவட்டம்
கமுதி அருகில் அத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி மாலதி இவர் சீமனேந்தல் கிராமத்தில் கிராம அலுவலராக பணியாற்றி வருகிறார் கடந்த வாரம் கமுதிக்கு பணியின் காரணமாக வந்த பொழுது கழுத்தில் இருந்த இரண்டு பவன் தங்க சங்கிலி தவற விட்டார் இதை கண்டுபிடித்து தருமாறு கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவ்வழியாக சென்ற கடலாடி தாலுகா கருங்குளம் கிராமத்தைச் சார்ந்த முருகன் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் கீழே கிடந்த தங்க சங்கிலியை எடுத்து சென்று உள்ளார் வீட்டிற்கு சென்று தன் மனைவியிடம் தங்கமா கவரிங் கேட்டுள்ளார் தங்கம் என்று சொன்னவுடன் உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதுகுளத்தூரில் உள்ள அவரது நண்பர் மலைச்செல்வத்தை தொடர்பு கொண்டு உள்ளார் இந்த நகையை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமென நண்பரிடம் கூறியுள்ளார் அவர் முதுகுளத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் அவர்களிடம் ஒப்படைப்போம் என்று கூறியுள்ளார் அதன் பேரில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்