போடி அருகே மீனாட்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த போது மணி என்பவர் குடும்பத்தினருக்கு மின்வாரியத் துறையினர் சார்பாக 10 லட்சம் ரூபாயை எம் பி தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் வழங்கினார்.
போடி அருகே மீனாட்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த போது மணி என்பவர் குடும்பத்தினருக்கு மின்வாரியத் துறையினர் சார்பாக 10 லட்சம் ரூபாயை எம் பி தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் வழங்கினார்.
தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சிபுரத்தில் கடந்த 02.04.2025 அன்று மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் மனைவி போது மணி (45) இவர் தோட்டத்திற்கு தண்ணீர் இரைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் உயிரிழந்தார்.இந்நிலையில் உயிரிழந்த போதுமணியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக மின்வாரிய துறையின் மூலம் இழப்பீடு தொகையாக 10 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டது.அந்தத் தொகையை இன்று தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் S. லட்சுமணன் அவர்கள் மின்வாரிய பொறுப்பு எஸ்சி ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் போதுமணியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.இந்நிகழ்வில் போடி திமுக நகர செயலாளர் புருசோத்தமன் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான்,மீனாட்சிபுரம் பேரூர் செயலாளர் செல்வம்,தேனி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் முத்துக்குமார், மற்றும் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மின்வாரியத் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

