செங்கல்பட்டு அருகே குண்ணவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்கரணை பகுதியில் அவிஞ்சனா பெயர் கொண்ட தனியார் வீட்டு மனை மற்றும் வீடு கட்டி விற்பனை செய்து வரும் நிறுவனம் அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்து வருவதால் மீட்டு தரக் கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அருகே குண்ணவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்கரணை பகுதியில் சர்வே என் 36 சுமார் மூன்று ஏக்கருக்கு மேல் சென்னையில் வீட்டுமனை மற்றும் கட்டுமான பணிகள் செய்து வரும் அவிஞ்சனா நிறுவனத்தின் சார்பாக ஈச்சங்கரணை பகுதியில் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் இப்பகுதியில் உள்ள இடத்தில் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார் இவர்கள் ஈச்சங்கரணை பகுதியில் உள்ள அரசு தரிசு நிலம் சர்வே எண் 36 ஆக்கிரமிப்பு செய்து இவர்கள் கட்டுமான பணி செய்யும் வட இந்திய ஊழியர்களுக்கு தங்குவதற்காக வீடு கட்டி தங்க வைத்து மின் இணைப்பு பெற்றுள்ளார் அதுமட்டுமின்றி இவர்கள் நடத்தி வரும் மகரிஷி வித்யா மந்தர் பள்ளி அருகே சுமார் 1.5 ஏக்கர் அரசு நிலத்தை ஸ்கேட்டிங் அமைத்து பள்ளி மாணவர்களிடம் பணம் பறித்து வருகின்றனர் அது ஒரு புறம் இருக்க ஈச்சங்கரணை கிராம ஏரியில் சுமார் 7 ஏக்கர் ஏரி மற்றும் நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்தும் ஈச்சங்கரனை கிராமத்தில் சுமார் 30 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் பணம் சம்பாதித்து கொண்டு உள்ளதாகவும் இதனால் குண்ணவாக்கம் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகும் ஈச்சங்கரணை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருடன் மனு அளித்து சென்னை சார்ந்த தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை அரசு பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்