இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது.


அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்.
“இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்” – என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது.
அது-
தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல;
தன்னை உணர்ந்துள்ள மெய்ஞானத்தின் புலப்பாடு!
அவர் இசைஞானி என்பதைவிட #மெய்ஞானி என்பதே பொருந்தும்.
- திருமாவளவன்