தமிழக பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிற பட்ஜெட் என மதுரையில் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி!!

அண்ணாமலையை பொறுத்த வரை வெறும் அட்டையை பார்த்து அரசியல் பண்ணுகிறார் என மதுரையில் மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர்:
மதுரை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறோம்.
மதுரை மாநகரம் என்றுமே பல நம்பிக்கைகளையும் பலவகையான விழாக்களையும் கொண்டிருக்கிற ஒரு மாவட்டம். காங்கிரஸ் சார்பில் இந்த இத்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு
இந்த பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறோம்.
மாணவிகளுக்கு இருபது லட்சம் லேப்டாப் கொடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்கள் வளர்ந்து வரும் நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை கொடுப்பதற்கான சிப்காட் புதிதாக அமைக்க பட்ஜெட்டில் அறிவித்தது பாராட்டப்பட கூடியது. கிழக்கு மண்டலமும் சேர்ந்து வளர வேண்டும் என்ற உள்நோக்கத்தில் உருவாக்கிய பட்ஜெட்டாக பார்க்க வேண்டும். இது அனைவருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
பட்ஜெட் குறித்து அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு ?
அண்ணாமலை பட்ஜெட்டை படிக்காமல் பேசுகிறார். ஒன்றுமில்லை என்று சொல்லுகிறார். மாணவிகளுக்கு லேப்டாப், சிப்காட், சாலை வசதி உள்ளிடட்வை பட்ஜெட்டில் அறிவிப்பு வந்துள்ளது. அது காலி பட்ஜெட்டா?.
தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருக்கும் அண்ணாமலை எது செய்தாலும் குறை சொல்லி வருகிறார். மத்தியில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வெறும் பட்ஜெட் என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏதும் அறிவிப்பு இல்லை. தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி தரவில்லை என்று தான் கூறினோம்.
அண்ணாமலையை பொறுத்த வரை வெறும் அட்டையை பார்த்து அரசியல் பண்ணுகிறார் என்றார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு
தேர்தலுக்கு ரொம்ப நாள் இருக்கிறது. தேர்தல் கூட்டணி என்பது ஜனவரிக்கு பின் தான் தெரியும். நிலைமை மாறும். அது அதிமுகவாக இருந்தாலும் தாவெக வாக இருந்தாலும் மற்ற கட்சிகள் நிலையாக இருந்தாலும் அந்த நேரத்தில் தான் தெரிய வரும். காங்கிரசை பொறுத்தவரை இந்தியா கூட்டணி என்பது ஒரு முகத்தோடு செல்ல வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்கிற கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதுதான்.
2016 வரை தமிழ்நாட்டின் கடன் என்பது மூன்று லட்சம் கோடிக்கு கீழ் தான் இருந்தது. இப்போது 7 லட்சம் கோடிக்கு போயிடுச்சு. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான திட்டங்கள் அது மெட்ரோ திட்டங்களா இருக்கட்டும் மற்ற திட்டங்கள் ஆகட்டும் இதற்கு மாநில அரசுக்கு போதிய நிதியை மத்திய அரசு தருவதில்லை.
மாநில அரசுக்கு நிதி கொடுப்பதில்லை என்று சொல்வதை விட நமக்கு தர வேண்டிய நிதியை தருவதில்லை. கடன் வாங்கி தான் வளர்ச்சி திட்டங்கள் செய்ய வேண்டியுள்ளது எதற்காக கடன் வாங்கி செலவழிக்கும் என்பது முக்கியம். கடன் வாங்கி விழாக்கள் கொண்டாடுகிறோமா? பெரிய திட்டங்கள் கொண்டுவருகிறோமா என்பது முக்கியமானது. மத்திய அரசு மாற்றான் தாய் மனப் போக்கோடு தான் நடத்துகிறது எனக்கூறினார்.
அதிமுகவில் சொன்னதைத்தான் இந்த பட்ஜெட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு
எடப்பாடி பழனிச்சாமி இந்த பட்ஜெட்டை வரவேற்று இருக்க வேண்டும். இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். நாங்க சொன்ன தை தான் இவங்க திருப்பி படிக்கிறாங்க. இந்த பட்ஜெட் எங்களுடைய பட்ஜெட். எங்களுடைய பட்ஜெட்டை காப்பி அடிக்கிறாங்க என்று சொல்லணும். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ரெடியாக இருக்கிறாரா? என்றார்.
மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு
அகில இந்திய காங்கிரஸ் பொறுத்தமண்டில் இந்திரா காந்தி காலத்தில் இருந்து தமிழ்நாட்டின் மீது இந்தியை திணிக்க கூடாது
மூன்றாவது மொழியை மக்கள் கற்றுக்கொள்ள ரெடியா இருக்கிற வரை இந்தியை திணிக்க கூடாது. இது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. பாஜகவை பொருத்தவரை நிதித் தர மாட்டோம் என பயமுறுத்துற அரசியலை, தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களுக்கு நிதித் தரமாட்டேன் என்று சொல்வது தவறானது. மிரட்டல் தோணி தவறானது. இந்தியாவின் ஒற்றுமைக்கு அது பெரிய விதத்தில் ஆபத்தாக முடியும். இந்த கலாச்சாரம் ஆர் எஸ் எஸ் -ன் கலாச்சாரம். இந்த வெறுப்பு அரசியல் என்பது ஆர்எஸ்எஸ் ன் அரசியல். இது பிரதான மோடி அமித்ஷா அவர்களுக்கு ஆர் எஸ் எஸ் கட்டுப்பட்டது என்றார்.