தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் சந்தித்து தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குன்னூர் மற்றும் பெரம்பலூரில் அரசு கலை கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்ததற்கும், நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தின் மையப் பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஓர் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.