கும்பகோணம் உட்கோட்டைக்கு புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக அங்கீத் சிங் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கும்பகோணம் உட்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டாக கீர்த்தி வாசன் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று ஸ்ரீபெரும்புதூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய உதவி போலீஸ் சூப்பிரண்டாக அங்கித் சிங் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து கும்பகோணம் உட்கோட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களிடம் கலந்துரையாடினார்.
புதிதாக பொறுப்பு ஏற்று கொண்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் சிங் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் கடந்த 2022-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் கேரள மாநிலம் கோழிக்கோடில் பயிற்சி பெற்றார். இதை தொடர்ந்து அங்கேயே உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் கோட்ட உதவி கலெக்டராக பணியாற்றி வரும் ஹிர்தியா எஸ். விஜயனுக்கும், உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று இருக்கும் அங்கித் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.