

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சின்ன மாங்குளம் ஊராட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள இந்திரா நகரில் உள்ள பகுதி நேர நியாய விலைக்கடை கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் உள்ளதாகவும், அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர் கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் இந்திரா நகரில் புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள அறிவறுத்தினார். அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அந்த பகுதியில் அருகில் உள்ள 4 கிராம மக்கள் பயன்பெறுக்கின்ற வகையில் வாரம் இரு முறை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய நியாயவிலை கடை கட்டிடத்தை உடனடியாக திறந்து வைத்தார்.