திருச்சியில் நிதி நிறுவன மோசடியில் பணம் இழந்த 49முதலீட்டாளர்களுக்கு ரூ.17,84,017 முதலீட்டு தொகையினை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மீட்டு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நிதி நிறுவன மோசடியில் பணம் இழந்தவர்களுக்கு தொகையை மீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
திருச்சி மாநகர் வரகனேரி ரம்பக்காரத் தெருவில் சையது முகமது என்பவரது மகன் அப்துல்காதர் அவரது மனைவி ஆஷாபானு ஆகியோர் அப்துல் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் முதலீட்டுத் தொகையை பெற்று திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகியதாக பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் புலன் விசாரணை செய்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைகண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கானது நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் முதலீட்டுத் தொகையினை திரும்ப வழங்குவதற்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோதி உத்தரவின் பேரில் 49 முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத்தொகை ரூ.17,84,017 முதலீட்டு தொகையினை திரும்ப வழங்கிட உத்தரவிட்டதின் பேரில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் முதலீட்டாளர்கள் செலுத்திய தொகையுடன் 2%வட்டி தொகையும் சேர்த்து வழங்கப்பட்டது. இது சம்மந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் பாலநாகதேவி, காவல்துறை தலைவர் சத்தியபிரியா. மத்திய மண்டல காவல்துறை காவல் கண்காணிப்பாளர் கிங்ஸ்லின், ஆகியோர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவினரின் பணியை பாரட்டினர்.
மேலும் கடந்த ஆண்டுகளில் சரவணா தங்கமாளிகை 63 முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தொகை ரூ.53,43,823யும் கருப்புசாமி பைனான்ஸ் நிறுவனத்தில் 15 முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் முதலீட்டு தொகை ரூ.12,08,410யும், மணிக்யூப் என்ற நிறுவனத்தில் 25 முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தொகை ரூ.56,20,792ஐ குரு பெனிபிட், 234 முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தொகை .21,38,190 ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் இழப்பீட்டு தொகையினை திருப்பி வழங்கப்பட்டது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
