அரசு நல திட்டம் வழங்கும் விழா!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நல திட்டம் வழங்கும் விழா. செங்கல்பட்டு, (11.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதியதிட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, நகர்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டம், தொடக்க விழா மற்றும் அரசு நல திட்டம் வழங்கும் விழா என பல திட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உடன் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டனர். மேலும், மக்கள் கூட்டம் ஆயிரம் கணக்கில் திடல் முழுக்க நிரம்பி வழிந்தது. இவ்விழா சிறப்பாக ஏற்பாடு செய்தார் மாவட்ட ஆட்சியர் அருன் ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், முதலமைச்சர் அறிவிப்பு விழாவில் வெளியிட்டார். செய்யூர் 800 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும், பொதுமக்களுக்கான இலவச பட்டா, கலைஞர் கனவு இல்ல திட்டம், விவசாயிகளுக்கு டிராக்டர், ஊனமுற்றோர்க்கு ஸ்கூட்டர், திருமண உதவி தொகை 8 கிராம், பள்ளி மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் மதிப்ப கிட், மரண உதவி தொகை. ரூ. 5,00,000 லட்சம் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட துணை ஆட்சியர் நன்றி கூறினார்.