நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் 58 கட்சிகள் பங்கேற்றனர்.

மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், தவெக உட்பட 58 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொகுதி மறுசீரமைப்பில் தற்போதைய நடைமுறையை 30 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் நம் அரசியல் சாசனத்தில் 84 ஆவது சட்ட திருத்தத்தின்படி நாடாளுமன்ற தொகுதிகளின்
மறுசீரமைப்பு 2026 ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பின்வரும் ஆண்டுகளில் இந்த மறு சீரமைப்பு பணி மத்திய அரசால் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன, மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பின் பொழுது தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 8 இலக்க நேரிடும். 39 எம்பிக்கள் குரல் எழுப்பும் பொழுதே மத்திய அரசு நமக்கு செவி சாய்ப்பதில்லை இத்தகைய தருணத்தில் எம்.பி.களின் எண்ணிக்கை குறைந்தால் அது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநிதியாகும் எனவே அனைத்து கட்சியினரும் வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து இந்த மறுசீரமைப்பு எதிர்ப்போம் என கூறினார்.