முதுகுளத்தூரில் அடிப்படை வசதிகள் மற்றும் சிசிடிவி கேமரா இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

முதுகுளத்தூரில் அடிப்படை வசதிகள் மற்றும் சிசிடிவி கேமரா இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், பாதுகாப்பான கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி வளாக கண்காணிப்பிற்காக அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வசதிகளை ஏற்படுத்தாமல் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக தமிழக அரசின் உத்திரவின்படி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணங்கள் குறித்த தகவல் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதா எனவும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்