போதைபொருட்களினால் ஏற்படும் தீமைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாட்டிற்கு முன்மாதிரியாக திகழும்மனித உரிமைகள் மற்றும் மனிதர்கள் மேம்பாட்டு அமைப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் இன்று ஜூன் 26 சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு தமிழ்நாடு மாநில தலைவர்
டாக்டர் சுரேஷ் அவர்கள்
இன்றைய உலகில் போதைப்பொருள் பயன்பாடு மனிதர்களின் அழிவுக்கு மிகவும் பெரிய அளவில் பங்காற்றி வருகிறது .
இதனை அறிந்து அனைத்து இளைஞர்களும் பெரியவர்களும்
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நன்கு அறிந்து அதைப் பற்றிய விழிப்புணர்வுக்கு உள்ளாக வேண்டும்
இன்றைய இளைஞர் சமுதாயம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது.
இவற்றை அடியோடு அழிப்பதற்காக இந்த போதைப்பொருள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது..
எனவே வரும் காலங்களில் அரசுடன் இணைந்து இந்த போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வைகளையும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளையும்.
அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும்.
அதோடு மட்டுமல்லாமல் போதைப்பொருள் பயன்படுத்தி அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இளைஞர் சமுதாயத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று கூடி செயல்பட வேண்டும்.
இதற்கான முக்கிய பங்காக பெற்றோர்களும் ஆசிரியர்களும் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் நமது நாட்டில் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசு ஒன்றிணைந்து இந்த போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு என்னென்ன வழிவகை செய்ய வேண்டும் என்று திட்டம் திட்டி உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும் என்றும்
மத்திய மாநில அரசுக்கு மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பு மாநில தலைவர் டாக்டர் சுரேஷ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.மேலும் மனித . உரிமைகள் மனித வள மேம்பாட்டு அமைப்பு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறதுஇந்த அமைப்புக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விரைவில் விருது வழங்கிய கௌரவிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கோரிக்கையும் வைத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்