கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு தலைமை அரசு மருத்துவமனையை பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு மருத்துவமனையில்
நேற்று நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கையோடு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ததால் குழந்தை இறந்துள்ளது, இதை
அறிந்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டபடி மருத்துவமனை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் கக்கன் காலனி தெருவை சேர்ந்த பிரதாப் ராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி (22) நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,

அனுமதிக்கப்பட்ட கையோடு உடனடியாக பெண் மருத்துவர் நிர்மலா மேற்கொண்ட அறுவை சிகிச்சை டெலிவரியில், ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது, வருத்தத்துடன் மருத்துவர்கள்

குழந்தை இறந்த செய்தியை உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர், துக்க செய்தியை அறிந்ததும், விஜயலட்சுமியின் கணவர் பிரதாப் ராஜ், மற்றும் அவருடைய உறவினர்கள், ஆத்திரமடைந்து கூச்சலிட்டபடி மருத்துவமனையில் தகராறு செய்து மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர், இது தொடர்பாக
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியுடன் ஆதரவாளர்களைத் திரட்டி, சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது,

அதிகாரிகள் தலையீடு

தகவல் அறிந்து விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் மாவட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர், மருத்துவமனை தலைமை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களிடம் நீண்ட நேரமாக சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினர் அதன் பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சப் கலெக்டர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர், மேலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியம் காரணமாக அரங்கேறும் செயல்களை உறவினர்கள் கண்டித்ததுடன் இது போன்ற அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் தடுக்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்து கலைந்து சென்றதால் நேற்று இரவு மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு