தூத்துக்குடியில் கனமழை பெய்தாலும் குறைந்தது 2 மணி நேரத்தில் மழை நீர் வடிந்து விடும் நிலையில் தான் உள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார். முகாமை தொடங்கி வைத்து கூட்டத்தில் மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் 3 வார்டுகளில் மட்டுமே கால்வாய் வசதியில்லை. 10 செமீ மழை பெய்தாலும் 2 மணி நேரத்தில் வடிந்து விடும் நிலை உள்ளது.

பொதுமக்கள் மழை குறித்து அச்சப்பட தேவையில்லை. தற்போது வரை 4500 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் முன்பு 3 பூங்காக்கள் இருந்த நிலையில், மக்களின் ஆரோக்கியத்திற்காக தற்போது 53 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் குழந்தைகளுக்காக வில்வித்தை பயிற்சி மையம், ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்படும். தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளை நிறுவேற்றும் வகையில் கருத்துக்களம் விரைவில் அமைய உள்ளது என்று தெரிவித்தார். முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு