கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலய வளாகத்தில் திமுக வேட்பாளர் க. அன்பழகன் வாக்கு சேகரிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையம் அருகிலுள்ள தூய அலங்கார அன்னை பேராலய வளாகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் நேரில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு கிறிஸ்துவ வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கம்போல நடைபெற்ற ஜெப ஆராதனையில் கலந்து கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர்களை நேரில் சந்தித்த வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன், திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் மற்றும் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், காங்கிரஸ் கமிட்டி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி. குமரன், மாநகர சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு அமைப்பாளர் தங்கராஜ், மாமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள்,சார்பு அணித் தலைவர்கள், மகளிர் அணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்