மாவட்ட செய்திகள் முதுகுளத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் ஓரணியில்_ தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உடைகுளம், வென்னீர்வாய்க்கால் பேரையூர் ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் உறுப்பினர்களை சேர்த்தார். July 6, 2025
மாவட்ட செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் நீதித்துறை நடுவர்கள் 86 பேருக்கு இடமாறுதலும், 27 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. முசிறி சார்பு நீதிபதி ஜெயகுமார், சேலம் தலைமை நீதித்துறை நடுவராகவும், ஓமலூர் சார்பு நீதிபதி குமாரவர்மன், விழுப்புரம் தலைமை நீதித்துறை நடுவராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் பிடிஎம் சதீஷ்குமார் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளராக பதவி உயர்வு! July 6, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட ஆளுநராக 3212 Rtn. Er.J. தினேஷ் பாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு முன்னாள் கவர்னரும், போலியோ ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் Rtn.PDG Dr.சின்னதுரை அப்துல்லா,பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.துணை ஆளுநர் ஜோன்.3Rtn. Dr.S.சோமசுந்தரம் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். July 6, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில்,தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கினங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி. July 6, 2025
மாவட்ட செய்திகள் செங்கல்பட்டு மாவட்டம்காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சி சக்தி நகர் 8-வார்டு 6-வது தெருவில் அமைந்துள்ள கால்வாயில் உள்ள கழிவுநீர் சாலையில் ஓடுகிறது இதனால் துர்நாற்றம் கொசுக்கள் தொல்லையால் இப்பகுதி மக்கள் அவதி கண்டு கொள்ளுமா ஆலப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம். July 6, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம், பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டைக்கும், இடையே படகு போக்குவரத்து இருந்த நிலையில். மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் நேற்று முன்தினம் படகு போக்குவரத்து தொடங்கியது. July 6, 2025
மாவட்ட செய்திகள் சேலம்-உளுந்தூர்பேட்டை இடையே புறவழிச்சாலைகள் பிரியும் இடங்களில் விபத்துக்கள் நடக்கும் பகுதிகள் என 13 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் ரூபாய் 262 கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலங்கள் அமைக்கப்பட்ட பிறகு சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் பெருமளவில் விபத்துக்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். July 6, 2025
மாவட்ட செய்திகள் வனத்துறை சுழல்அங்காடி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக அமைக்கப்பட்ட சூழல் அங்காடியை தமிழக வனம் மற்றும் கதர்கிராம வாரியத்துறை அமைச்சர் . ஆர். எஸ். ராஜகண்ணப்பன் திறந்துவைத்தார். July 6, 2025