சேலம், மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு வந்துகொண்டிருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேலம், மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு வந்துகொண்டிருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வழிந்தோடி காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து செல்வதை காண, அருகில் உள்ள புதிய பாலத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் திரண்டு வந்து கண்டு மகிழ்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்