தாம்பரம் மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு: உடனடியாக சரி செய்ய கோரி அதிமுக சார்பில் ஜூலை 11.7.2025 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்!

தாம்பரம் மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு: உடனடியாக சரி செய்ய கோரி அதிமுக சார்பில் ஜூலை 11.7.2025 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்!
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர் அத்தினாபுரம் பகுதி மக்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடை இன்றி கலப்பதால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் பெறும் அளவு பாதிக்கபட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது!
பல்லாவரம் அருகிலுள்ள நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாய தாமரைகளை பொதுமக்களே ஒன்று கூடி மிகுந்த சிரமப்பட்டு அதை அகற்றினர்,
மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அலட்சியத்தாலும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் மீண்டும் இந்த ஏரியில் ஆகாய தாமரைகொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறி வருகிறது!
இதற்கெல்லாம் விடிவு காலம் வெகு விரைவில் வர உள்ளதாகவும், மக்களைப் பற்றியும் மக்கள் நலனை பற்றியும் சிறிதும் கவலைப்படாத திமுக அரசை கண்டித்தும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேடை கண்டித்தும், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் அ.தி.மு.க சார்பில், ஜூலை 11ம் தேதி தேதி மாலை 4 மணிக்கு ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் கோவில் சந்திப்பு அருகில் ,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்!

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு