கும்பகோணத்தில் திமுக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ( FSO-TN.) சார்பில் மும்மொழி கொள்கைக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் எதிரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தஞ்சை:(பிப்.25) கும்பகோணத்தில் பாசிச பாஜக அரசை கண்டித்து திமுக மாணவர் அமைப்பு தலைமையில் அனைத்து மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்
மும்மொழி கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பதுடன் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியை தர மறுத்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும்பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு (FSO) – TN) சார்பில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் க.செந்தில்குமார் தலைமையில் கும்பகோணம் மகாமகக்குளம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.ராஜேஷ் வரவேற்புரையாற்றினார். ப.இலக்கியா, க.வினோத்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக இந்தி திணிப்பை எதிர்த்து தாய்தமிழ் செம்மொழியை போற்றி மாணவர்களால் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து SFI மாவட்ட செயலாளர் கு.சந்துரு, SMI மாவட்ட மாணவர் அமைப்பு ஆர்.சதாம் ஹுசேன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட தலைவர் சின்ன ஜெயபிரகாஷ், தமிழ் மாணவர் மன்றம் குடந்தை தொகுதி பொறுப்பாளர் ஆர் தீனா, தமிழ் மாணவர் மன்றம் திருவிடைமருதூர் தொகுதி பொறுப்பாளர் கோ.ரகுநாத், மதிமுக மாணவர் அணி செயலாளர் அரங்க.பெரு.செல்வகுமார் மற்றும் SFI மாநில செயலாளர் கோ.அரவிந்த்சாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இறுதியாக திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சௌ.தேவராஜன் நன்றி கூறினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து மாணவர் இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தோழர்கள் கல்லூரி மாணவர்கள் பாசிச பாஜக அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்தும் இந்தி திணிப்பை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி கோஷமிட்டனர்.
