சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சேலம் மாவட்டம். ஜாகீர் அம்மாபாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக 119 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் சிப்காட் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைவதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 50,000 பேருக்கும் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும்.இதில் குறிப்பாக மகளிருக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு நூல் பதனிடுதல், கஞ்சி தோய்த்தல், நெசவு, ஜவுளி உற்பத்தி மற்றும் துணி பதனிடுதல் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி என பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா ரூ.880 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.7,000/ கோடிக்கு ஏற்றுமதி வருவாய்கிடைக்கப் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜவுளித்தொழிலில் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் உயருகிறது.இப்பணிகள் அனைத்தும் இம்மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தகவல்..

தொடர்புடைய செய்திகள்