தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த போது தன் உயிரை பணையம் வைத்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நிறுத்தி துரிதமாக செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு;-

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தரணியா தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு மஹால் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஒரு டீக்கடை முன்பாக இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்துள்ளனர். இதனைக் கண்ட சார்பு ஆய்வாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்தும், மேலும் காயம்பட்ட இருவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்டார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து செயல்பட்டு அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியும், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர் தரணியாவை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு