அடிப்படை வசதியில்லாமல் செயல்படும் அரசு கலைக்கல்லூரி…!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு கலைகல்லூரியில் மிகவும் அடிப்படை வசதியில்லாமல் போய்விட்டது. கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு குடிக்க தண்ணீர் கூடஇல்லை. கல்லூரியின் உள்ளே உள்ள ஆழ்துளை குழாயின் மூலம் உப்புதண்ணீர்தான் வருகின்றது. பக்கத்தில் உள்ள சமத்துவபுரத்தில் இருந்து தள்ளுவண்டியின் மூலம் தண்ணீர் குடிக்க எடுத்து வரப்படுகிறது. மேலும் போனவருடம் 600 மாணவர்களுக்கு மேல் படித்த கல்லூரியில் இந்தாண்டு 3௦௦ மாணவர்களுக்கும் கிழே தான் படிக்கின்றார்கள்.
இந்த கல்லூரியானது 2000 மாணவர்கள் படிப்பதற்கு தகுதியான கல்லூரிஆகும். இந்த கல்லூரியில் எந்த ஒரு அடிப்படை வசதிகூட இல்லாததால் இங்கு படிக்க மாணவர்கள் விரும்பி வருவதில்லை. பேரூந்து நிறுத்தம் இருந்தும் பேரூந்து கல்லூரி ஸ்டாப்பில் நிற்பதில்லை. கல்லூரி நேரத்திற்கு பஸ்சும் இல்லை. இதனால் சரியான நேரத்திற்கு மாணவர்கள் கல்லூரிக்கு வரமுடியவில்லை. மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் 75சதவீதம் ஏழை எழியோரின் பிள்ளைகள்தான். ஆகையால், அரசிடம் இருந்து கல்லூரிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என கடலாடி வடக்கு ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் செயலாளர் க.ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி செய்ய தவறும் பட்சத்தில் கட்சியின் சார்பாக சாலைமறியல் விரைவில் நடத்தப்படும் என்றார்.