மீனவர் நலவாரிய உறுப்பினர் சேசு தலைமையில் தமிழக படகுகளை மீட்க மீனவர்கள் இலங்கை பயணம்!!

ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தீவு மீனவர்களின் படகுகளை இலங்கையில் விடுவிக்கப்பட்ட 12 படகுகளை மீட்டு வருவதற்காக இன்று (ஆகஸ்டு 25) இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சேசு தலைமையில் இலங்கை புறப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர் 2018 முதல் 2023 வரை சிறைபிடித்த 12 படகுகளை இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டன. இந்தப் படகுகளின் இன்ஜின் செயல்பாடு, மரப்பலகைகள் சேதமடைந்த படகுகளை சரி செய்து மீட்டு வர முதல் கட்டமாக இலங்கையில் ஆய்வு செய்ய இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை செல்ல மத்திய மாநில அரசாங்கத்திடம் அனுமதி கோரினர். மத்திய அரசு அனுமதி வழங்கியதால் இன்று காலை கராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து ஒரு படகில் 14 பேர் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு செல்கின்றனர். அங்குள்ள படகுகளின் நிலை குறித்து ஆய்வு செய்து நாளை மறுநாள் (ஆகஸ்டு 27) இராமேஸ்வரம் திரும்புகின்றனர்.