அதிமுகவுடன் கூட்டணி என்பது பொய்த் தகவல்: விஜய் கட்சி விளக்கம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஜயின் தவெக விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக துணை முதல்வர் பதவி மற்றும் 80 சீட்டுகளை விஜய் அதிமுகவிடம் கேட்டு பேசி வருகிறாராம். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக, பாஜக, நாம் தமிழரை விமர்சனம் செய்த விஜய், அதிமுக, விசிக, காங்கிரஸ், பாமகவை விமர்சனம் செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தவெக சார்பாக விஜய் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று செய்திகள் வந்தன. 80 : 154 பார்முலாபடி அதிமுகவிற்கு 154 இடங்களை விட்டுத்தர விஜய் தயார் என்று செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான்2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஜயின் தவெக விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே அவர் பாமகவுடன் பேசுவதாக செய்திகள் வந்தன. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ‛பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று திடீரென்று பதிவிட்டுள்ளார். இதனால் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பின் வேறு ஒரு முக்கியமான நபரும் காரணமாக இருக்கிறார். அவர்.. ஜான் ஆரோக்கியராஜ். தற்போது விஜயின் அரசியல் முடிவுகளுக்கு பின்னனியில் இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.