பட்டறைகார தெரு பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி மக்களின் தினசரி போக்குவரத்துக்கும் வீடுகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தி தர பகுதி மக்கள் மனுவழங்கினார்கள்.
ராமநாதபுரத்தில் 15 வது வார்டு கவுன்சிலர் காதர் பிச்சை தலைமையில் நகராட்சி கமிஷனர் அஜீதா பர்வீன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 15 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:- பட்டறைகார தெரு பள்ளிவாசல் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி மக்களின் தினசரி போக்குவரத்துக்கும் வீடுகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுகாதார பிரச்சனைகளும் உருவாகாமல் இருக்கவும் எனவே அப் பகுதியில் மழை நீர் வெளியேற்றத்திற்கான கால்வாய் அல்லது வடிகால் அமைப்பு போன்ற நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தி தரவும், 15 வது வார்டில் குப்பை வண்டி முறையாக வருவதில்லை, இதனால் வீடுகளில் தெருக்களில்,கால்வாய்களில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது, எனவே தினமும் குப்பை வண்டி வருவதற்கு நிரந்தரமான ஏற்பாடு செய்து தருமாறும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

