ராமநாதபுரம் நகராட்சியை சேர்ந்த 30வது வார்டில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் நகராட்சியை சேர்ந்த 30வது வார்டில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வார்டு கவுன்சிலரும், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவரான கார்மேகம் முன்னிலையில், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின்
தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனரிடம் வழங்கினார்கள். அதில் சின்ன கடை தெருவில் ரேஷன் கடை அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஹைமாஸ் விளக்கும்,தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட அச்சமாக இருக்கின்றபடியால் தெரு நாய்களை அப்புறப்படுத்தவும், உழவர் சந்தைக்கு அருகில் ஒரு பூங்கா அமைத்து தரவும் பொதுமக்கள் கோரிக்கைகளை வைத்தார்கள்.இதைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்து அதில் மூன்று கோரிக்கைகளை உடனுக்குடன் சரி செய்து தருவோம் என அவர் கூறினார்.

