செங்கல்பட்டு மாவட்டம்வேதாச்சலம் நகர் வரதராஜ தெருவில்வெள்ளி பிள்ளையார்ஐம்பொன் வேல் முருகன் சிலைதங்கம்3000பணம் திருட்டு திருடனை கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சியில் வேதாச்சலம் நகர் வரதராஜ தெருவில் அமைந்துள்ள வீட்டில் உரிமையாளர்
வசந்தகுமார் S/O சுந்தரமூர்த்தி என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மேல் வீட்டின் கதவை பூட்டிவிட்டு கதவின் அருகில் வீட்டின் சாவியை வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.பின்னர் அன்று மாலை வீட்டுக்கு 5.30 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டின் உரிமையாளர் அப்போது வீட்டில் உள்ள பூஜையறையில் வைக்கப்பட்டுள்ள
வெள்ளி பிள்ளையார் சிலை மதிப்பு ரு.18000, ஐம்பொன் வேல் முருகன் சிலை ரு.15000,சுமார் ஒரு கிராம் தங்க செயின்,பணம் 3000 திருடு போனது என்று தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்
செங்கல்பட்டு நகராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலை அறிந்த செங்கல்பட்டு நகராட்சி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் லட்சுமிபதி விரைந்து வந்து வசந்தகுமார் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடி கேமரா சோதனை செய்து பார்த்து திருடனை அடையாளம் தெரிந்துள்ளனர். திருடனை தீவிரமாக தேடி வந்த நிலையில் செங்கல்பட்டு ரயில்வே நிலையம் அருகில் பதுங்கி இருந்தது தெரியவந்தது அந்த திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் புலிப்பாக்கம் ஊராட்சியில்
அன்பு நகர் திருவேற்காடு முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கணேசன் வயது (23) என்பது தெரிய வந்தது. பின்னர் திங்கட்கிழமை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.இது போன்ற சம்பவம் நடக்காம இருக்க பொதுமக்கள் இரவு நேரத்திலும் மட்டுமின்றி பகலிலும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு