உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக சர்க்கரை நோய்களைப் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
இதில் பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் சர்க்கரை நோய்க்கு சாப்பிடக்கூடிய உணவுகள் சாப்பிட கூடாத உணவுகளை பார்வைக்காக வைக்கப்பட்டு நடைபெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கத்தில் சர்க்கரை நோயை வராமல் தடுக்க என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாத உணவுகள் என்னவென்று பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு உணவுப் பொருட்களை பார்வைக்கு வைக்கப்பட்டு விழிப்புணர்வாக தெரிவித்தனர்
மேலும் இந்த கருத்தரங்கத்தில் டாக்டர் சலீம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு தெரிவித்து பேசுகையில்
சர்க்கரை நோய் வராமல் தடுக்க நடைப்பயிற்சி உடற்பயிற்சி நார்ச்சத்து போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவே சர்க்கரை நோய் எப்படி வரும் என்று அறிந்து கொண்டாலே இந்த கொடிய நோயை மருத்துவர்களிடம் செல்லாமல் தடுத்துக் கொள்ளலாம் என பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இன் நிகழ்வில் இருதய நோய் சிகிச்சை நிபுணர் சிறப்பு மருத்துவர் டக்டர் வெங்கடேசன் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர் அனிதா தனசேகரன் மற்றும் இருக்கை மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்
மேலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உளவியல் மக்கள் தொடர்பு அலுவலர் நிபுணர் மகாலட்சுமி மக்கள் தொடர்பு அதிகாரி தினேஷ் காளிமுத்து மேலாளர் சத்தியசீலன் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


