2025 ஆம் ஆண்டிற்கான2nd கான்னுர் இன்டர்நேஷனல் ஓபன் மேட்ச் சதுரங்க போட்டி பெங்களூரில் நடைபெற்றது.இதில் இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்தும் அமெரிக்கா ஸ்காட்லாந்து, கனடா, போன்ற நாடுகளில் இருந்தும் சுமார் 375 மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த போட்டியில் ஒரு GM மற்றும் 4 IM, 6 WFM போன்ற சிறந்த வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தப் போட்டியில் புதுக்கோட்டை
சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் P. D. இமான் கலந்து கொண்டார்.இதில் அவர் 56 புள்ளிகளையும், 13 வயது மாணவர்களுக்கான பிரிவில் சிறப்பு பரிசையும் பெற்றார் ….. மாணவனை பள்ளியின் செயலர் மதிப்பிற்குரிய திரு ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான் அவர்கள் வாழ்த்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சித சேகர் அவர்களும் ஹட்சன் செஸ் அகடாமி பயிற்சியாளர்GM விஷ்ணு பிரசன்னா தந்தை பீர்முகமது தாயார் தீபா மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் உறவினர்கள் பாராட்டினார்கள். இந்தியாவிற்காக கலந்து கொண்ட அந்த மாணவனை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் நல்லாசிரியர் க.முத்துராமலிங்கம் அவர்களும் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்