அதிர்ச்சி! ஆணையரின் மிரட்டல்: மனமுடைந்த அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி!
கும்பகோணம் மாநகராட்சியில் பரபரப்பு! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில், மாநகராட்சி ஆணையரின் கடும் நெருக்கடி மற்றும் மிரட்டலால் மனமுடைந்த அங்கன்வாடி ஊழியர் ஒருவர் இன்று (நவம்பர் 18, 2025) தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
பாதிக்கப்பட்டவர்: மாநகராட்சி அங்கன்வாடி ஊழியர் சித்ரா.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ். supervisor கார்த்திகேயன் ஆகியோர் (SIR படிவங்கள்) உடனடியாகப் பூர்த்தி செய்து நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆணையர் சித்ராவைப் மோசமான முறையில் திட்டியதாகவும், தொடர்ந்து கடுமையான மன அழுத்தத்தை அளித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையரின் நெருக்கடியைத் தாங்க முடியாமல், சித்ரா மனமுடைந்து தற்கொலை முயற்சியில் இன்று ஈடுபட்டார். இந்த நிலையில் ஊழியர்களால்
சித்ரா உடனடியாக மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மீதான பணி நெருக்கடி, ஒரு ஊழியர் தற்கொலை முயற்சி மேற்கொள்ளும் அளவுக்கு மோசமாக இருப்பது, மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


