பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் பழனியில் உள்ள பகுதிகளில் சுற்று சூழலை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் மரக்கன்று நடுதல், மற்றும் மரகன்று நடவு செய்ய இயலாத இடங்களில் விதை பந்துகளை தூவுதல் போன்ற பணிகளை பழனியாண்டவர் கல்லூரி NCC படை மாணவர்கள், விழுதுகள் தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த பணிகளை கோவில் நிர்வாகம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன் இரண்டு கட்டங்களாக விதை பந்துகள் பழனி மலையில் தூவப்பட்டது.
இன்று 19/11/2025 மூன்றாவது கட்டமாக புதன் கிழமை பழனி, இடும்பன் மலையில் படிபாதை ஓரம் மற்றும் மலை மீது ஆலம், அரசு, அத்தி மரம் அடங்கிய 4000 விதை பந்துகள் , பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் K.M. சுப்ரமணியன். தலைமையில், திருக்கோவில் இணை ஆணையர் S.மாரிமுத்து முன்னிலையில், தூவப்பட்டது!
இதில் அறங்காவலர் குழு தலைவர் K.M. சுப்ரமணியன், இணை ஆணையர் S. மாரிமுத்து, பழனியாண்டவர் கல்லூரி முதல்வர் ரவிசங்கர், NCC படை மாணவர்கள், அதன் தலைவர் பாக்கியராஜ் விழுதுகள் அமைப்பு நிர்வாகி குப்புசாமி, மற்றும் திருக்கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்!
இதுவரை
மொத்தம் 12 ஆயிரம் விதைபந்துகள் தூவப்பட்டுள்ளது! 32 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது!இந்த விதைபந்துகள் திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள மனநல காப்பகம் மற்றும் விழுதுகள் அமைப்பு இணைந்து, தயாரித்து வருகின்றனர்.
மேலும் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது! என பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு