இந்தியாவின் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றக்கூடிய வகையில் அனைத்து மத கோவில்களிலும் சிறப்பு வழிபாடு.

இந்தியாவின் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றக்கூடிய வகையில் அனைத்து மத கோவில்களிலும் சிறப்பு வழிபாடு. தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் இன்று காலை கொண்டாடப்பட்டது,
முதலில் மடத்துத்தெரு காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனையும் காமராஜ்சாலை அரக்காசு தர்ஹாவில் பிராத்தனையும் புனித அன்னை தேவாலயத்தில் வழிபாடும் நடந்தது, பின்பு மகாத்மா காந்தி, காமராஜ் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதனைத் தொடர்ந்து காந்திபூங்கா எதிரில் பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது, இந்நிழ்ச்சிக்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் ஓ. வி. கிரஷ்ணசாமி தலைமை தாங்கினார், மாநில விவசாய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஓ.வி.கே வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்ச்சியில் மாவட்டகாங்கிரஸ் பொதுச்செயலாளர் மாமன்ற உறுப்பினர் அய்யப்பன், நகர காங்கிரஸ் நிர்வாகி பாலசுப்ரமணியன், மருதையன் கணபதி, கோவி ராஜன், ஆடிட்டர் செந்தில் சீனி. நலங்கிள்ளி, குரு, மீனாட்சி, மற்றும் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர், நிகழ்ச்சியின் முடிவில்
சங்கர் நன்றி கூறினார்,

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு