திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 28 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.02.2025) கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழா நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 28 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை அருகில் உள்ள அரசு வைகவுண்ட்ஸ் கோஷன் (மகளிர்) முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடி குத்துவிளக்கேற்றி வைத்து, புதியதாக திறக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார். இந்நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) பி.அன்பரசி உதவி செயற்பொறியாளர் ஆர்.வேங்கடேசன், மாவட்ட கல்வி அலுவலர் ப.செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ச.கல்பனா, கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.