ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கள்ளுக்கடை மேடு பகுதியில்நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.699.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதையொட்டி அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் இன்று (22.02.2025) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.699.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதையொட்டி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன்மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இகாப., கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ரமேஷ்கண்ணா உட்பட பலர் உள்ளனர்.