கும்பகோணம் அமுதசுரபி அறக்கட்டளை
நடத்திய 4.ஆம்.ஆண்டு துவக்க விழா

தஞ்சை:(பிப்.22)பசியில்லா கும்பகோணம் அமுதசுரபி அறக்கட்டளை
நடத்திய 4.ஆம்.ஆண்டு துவக்க விழா மற்றும் சமூக சேவகர்களுக்கான மாபெரும் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று தாராசுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதில் அமுதசுரபி அறக்கட்டளை நிறுவனத் தலைவர்
எஸ், ஆனந்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர் இதில் மாற்றுத்திறனாளிகள் அவரவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் சினிமா பாடல்கள் கலை இலக்கிய வரலாறு சொற்பொழிவுகளை பேசியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மற்றும் விசிக பிரமுகர் முல்லைவளவன் மற்றும் தவெக. விஜய் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவன தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்,

தொடர்புடைய செய்திகள்