திமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட பொருளாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட திமுக செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், இராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் கே.இ. நாசர் கான்,துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி,சாயல்குடி கிழக்கு ஒன்றியம் குலாம் மொய்தீன், சட்டமன்ற தொகுதி
பார்வையாளர்கள் கொடி சந்திரசேகர் அருண், சுதர்சன் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடத்துவது பற்றியும்,கழக ஆக்கப் பணிகள் பற்றியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.