நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல் சபரிநாதன்


விலகல் அறிவிப்பு:
அண்ணா மர கிளைகள் உடைந்து விழுகும் பொழுது சத்தம் வர தான் செய்யும், ஆனால் உங்களை சுற்றி இருக்கும் கரையான்கள் என்றும் சத்தம் இடாது அது உங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வேரோடு சாய்த்து விடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணா அந்த கரையான் கூட்டத்தோடு இருந்து உங்களுக்கு துரோகி ஆகுவதை விட கிளைகளாக விழுந்து எதிரியாகுவதே மேல் என்றும் நீங்கள் கற்றுத் தந்த தமிழ் தேசியப் பாதையில் எங்கள் பயணம் தொடரும்.🙏🏻🙏🏻
இதுவரை என்னுடன் ஒத்துழைப்பு அளித்த அண்ணன் தம்பிகள் மற்றும் ஆசனாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்த கட்சி உறவுகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் எனது தம்பிகள் 300க்கும் மேற்பட்டோர் இக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கின்றோம்🙏🏻