ராமநாதபுரம் மாவட்டம்,எல்ஐசி பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரியும்,எல்ஐசியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரியும் ,புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், இன்சூரன்ஸ் சட்டங்களை திருத்தக்கூடாது எனக் கோரியும் பொது துறைகளை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தியும் இன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் எல்ஐசியில் பணிபுரியும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம்,எல்ஐசி பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க கோரியும்,எல்ஐசியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரியும் ,புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், இன்சூரன்ஸ் சட்டங்களை திருத்தக்கூடாது எனக் கோரியும் பொது துறைகளை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தியும் இன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் எல்ஐசியில் பணிபுரியும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் எல்ஐசி அலுவலகத்தில் இன்று ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்துவிட்டு வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் அலுவலகம் முற்றிலும் செயல்படவில்லை. இதைத்தொடர்ந்து அலுவலக வாசலில் கிளைத் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
