பரமக்குடியில் மாவட்டசெயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் MLA முன்னிலையில் 1000பேர் திமுகவில் இணைந்தனர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்றுஎல்லோருக்கும் எல்லாம் என்கிற சமூக நீதி பார்வையில் நடைபெற்று.

பரமக்குடியில் மாவட்டசெயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் MLA முன்னிலையில் 1000பேர் திமுகவில் இணைந்தனர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்று
எல்லோருக்கும் எல்லாம் என்கிற சமூக நீதி பார்வையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட 1000- மேற்பட்ட மாற்று கட்சி நிர்வாகிகள்
மண்டல பொறுப்பாளரும் நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில்
தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்கிற அரசாக இருக்கிற திராவிட மாடல் அரசில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற மகத்தான முன்னெடுப்பின் மூலம் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டனர்
ஓரணியில் தமிழ்நாடு என்கிற மகத்தான திட்டத்தின் மூலம் 1000 மேற்பட்ட மாற்று கட்சி தோழர்கள் உறுப்பினராக மட்டும் இல்லாமல் ஓர் இயக்கமாக ஒன்றிணைத்த மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்ட திமுக தனி சிறப்பை பெற்றது என்று அமைச்சர் பாராட்டினார்
இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னாள் அமைச்சர் சுந்தராஜன் மற்றும் ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்