சேலம் மாவட்டம்.. காடையம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி போலீசார் பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம்.. காடையம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி போலீசார் பூசாரிப்பட்டியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி டிப்பர் லாரியை நிறுத்துமாறு போலீசார் கை காட்டினர். ஆனால் லாரி நிற்காமல் சென்றுள்ளது. போலீசார் விரட்டிச் சென்று லாரியை மடக்கிப் பிடித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மண் கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து குதிரைகுத்திபள்ளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜவான் என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி பறிமுதல் செய்தனர்..
