சேலம்,மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சேலம்,மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து, கடந்த மாதம் 29ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சீர் அடைந்தது. இதனால் நேற்று முதல் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது..

தொடர்புடைய செய்திகள்