முதல்வர் மருந்தகம் தமிழ்நாடெங்கும் 1000 மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.


‘எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்திற்கு செயல்வடிவம் கொடுக்கின்ற அரசாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது என்பதற்கு மேலும் ஒரு சான்று முதல்வர் மருந்தகம். ஏழை எளிய மக்களுக்கு தரமான மருந்து பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய, நம் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் தமிழ்நாடெங்கும் 1000 மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. முதல் மருந்தகத்தை சென்னை தியாகராய நகரில் நம் முதலமைச்சர் திறந்து வைக்க, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில், சி.ஐ.டி காலனி பகுதியில் முதல்வர் மருந்தகத்தை நாம் இன்று திறந்து வைத்தோம். மருத்துவ சேவையும் மருந்து பொருட்களும் மலிவு விலையில் மக்களை சென்றடையும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இம்முயற்சி வெல்லட்டும். பொதுமக்கள் முதல்வர் மருந்தகங்களை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை அமைத்துக்கொள்ள வாழ்த்துகிறோம்.

