பெரம்பலூர் மாவட்டம்மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த, தானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலையம் என்ற படைப்பினை உருவாக்கிய அரசு உதவி பெறும் மௌலானா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII –TN) உதவியுடன், அரசு உதவி பெறும் மௌலானா மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் தானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலையம் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட படைப்பு மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்களிடம் மாணவர்கள் படைப்பினையும், பாராட்டுச் சான்றிதழையும் இன்று (23.07.2025) காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்க தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII –TN) , தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2022 செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது (SIDP) பள்ளி கல்வித்துறையின் முழு ஒத்துழைப்புடனும் மற்றும் யுனிசெப் நிறுவனத்துடனும் இணைந்து மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வழிகாட்டி ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் இந்த திட்டத்தினை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.அதன்படி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2024-25 ஆண்டுக்கான வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாதிரி தயாரிப்புகளை காட்சிப்படுத்தல் நிகழ்வானது 16.07.2025 (புதன்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இப்படைப்புகளில் முதல் பரிசு பெற்ற (20 அணியினர்) தலா ஒரு லட்சமும், இரண்டாம் பரிசு பெற்ற (15 அணியினர்) ஐம்பதாயிரம் ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற (15 அணியினர்) இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயும் மொத்தம் 50 அணியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசும், 50 அணிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் சான்றிதழ்களை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் UNICEF இணைந்து நடத்திய பள்ளி புத்தாக்கம் மேம்பாட்டு திட்டத்தில் (SIDP 3.O) பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் மௌலானாபள்ளி மாணவர்கள் மாநில அளவில் பங்கு கொண்டு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பெரம்பலூர் மௌலானா பள்ளி மாணவர்கள் படைப்புகளையும், 50 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட திட்ட மேலாளர் முனைவர்.ராம்குமார் ராமச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்திக், மௌலானா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மு.ராஜ்முகமது, தானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலைய படைப்பு பயிற்சி ஆசிரியர் திரு.சை.சையத் முஸ்தபா, மாணவர்கள் அ.ஆரிஷ் அஹமது, க.முககம்மது தௌபிக், ம.யோகசபாபதி, ப.சன்ஜெய், அ.விஜய்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்