கமுதி அரசு நூலகத்தில் படித்த மாணவர் சாதனை.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரசு முழுநேர நூலகம் இயங்கி வருகிறது. இதில் கமுதி சுற்று வட்டார மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் வருகைபுரிந்து மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்கு படித்து வருகின்றனர். அதில் பயின்று வந்த கண்ணார்பட்டியை சேர்ந்த மாணவர் வெங்கடேஸ்வரன் என்ற மாணவர் 2024 ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப் 2A போட்டித் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழக அளவில் 186-வது நபராகவும், சமூக உட்பிரிவு அளவில் 38 -வது நபராக தேர்ச்சி பெற்றார். அவருக்கு பணிக்கான கலந்தாய்வு நடைபெற்றது அதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் – உள்ளூர் நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது அவரை கமுதி அரசு முழுநேர கிளை நூலகத்தின் நூலகர் கண்ணதாசன் நேரில் அழைத்து வாழ்த்தினார் மற்றும் வாசகர்கள், பொதுமக்கள், பயிற்சி மாணவ, மாணவிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு