தூத்துக்குடி மாவட்டம்:மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தை தமிழக முழுவதும் மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சித் தலைவரும் , அதிமுக பொதுச்செயலாளரும்மானஎடப்பாடி கே பழனிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மக்களை சந்தித்து உரையாற்றினார்
விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் வானம் பார்த்த கரிசல் பூமி என்றும் இது முழுமையான விவசாய பூமியாகவே இருப்பதாகவும் இங்கு வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர் அதற்கு உறுதுணையாக எப்போதும் அதிமுக அரசு இருந்துள்ளது என்றும், விளாத்திகுளம் தொகுதியில் மிளகாய் பருத்தி மல்லி, சோளம் குருதவல்லி மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன, விவசாயிகள் மிளகாய் மற்றும் சோளம் போன்ற சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்ட போது அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு சுமார் 400 கோடி இழப்பீட்டு தொகை வழங்கிய அரசு அதிமுக அரசு, விளாத்திகுளம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஏரி, குளம், கம்மாய் ,மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் தூர்வாக்கப்பட்டது அதிமுக ஆட்சி காலத்தில் தான், இதனால் விளாத்திகுளம் பூமி விவசாயத்தில் ஏற்றம் பெற்றதும் அதிமுக ஆட்சியில் தான், விளைச்சல் இல்லாத காலங்களில்,சுமார் 187 கோடி மக்காச்சோளத்திற்கு நிவாரணம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்றியஅரசு அதிமுக அரசு தான், மக்களுக்கு விலையில்லா ஆடுகள் மாடுகள் கொடுத்ததும் அதிமுக அரசு, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளை காப்பாற்றிய அரசும் அதிமுக அரசுதான், என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசுகையில், அடுத்த வருடம் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இலவச வீட்டு மனை பட்டாக்களும் வீடு இல்லாத ஏழைகளுக்கு காண்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற உறுதியும் அளித்தார், ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போது தமிழக மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு வருடமும் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் தைத்திருநாளான பொங்கல் திருநாளை கொண்டாட பொங்கல் பரிசுத் தொகையாக 2500 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்…..

