கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மீன் வியாபாரி ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அருகே உடையார் கூட்டம் கிராமத்தில்,
வசித்து வருபவர் ஜவருல்லா (45). இவரது
சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே கரம்பக்குடி ஆகும். இவர்
தனது மனைவி கிருஷ்ணவேனி என்ற பாத்திமாகனியுடன் கடந்த
10 வருடங்களாக உடையார்கூட்டம் கிராமத்தில் வசித்து வருகின்றார். இவர்களது மகள் அப்பகுதியில் சிறுவர், சிறுமியர்களுக்கு
பாடம் சொல்லி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது
வீட்டிற்கு வந்து பாடம் படிக்க சிறுவர்களுக்கிடையே
பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்
ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று மாலை
ஜவருல்லாவை அவரது வீட்டின் முன்பு வந்த ஒரு கும்பல் வந்து சராமரியாக வெட்டி விட்டு சென்றது.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஐவருல்லாவை கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஜவருல்லா உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்