ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கும் 🎥 சீதா பயணம் படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா, சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.